தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளியில் எலி செத்துக் கிடந்த தண்ணீரை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

தினமணி

சங்கராபுரம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பருகிய மாணவர்களில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பருகினர். தண்ணீர் பருகிய சிறிது நேரத்தில் மாணவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள்அருகில் இருந்த ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களான 10-ஆம் வகுப்பு பயிலும் பிரபாகரன், சாந்தகுமார், பிரகாஷ், கோபிநாத், அய்யப்பன், பாலாஜி, அசோக், சதீஷ், 9-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், பரத், கோகுல், பாலாஜி, மணிகண்டன், பிரசாத், பிரகாஷ், அன்பழகன், 7-ஆம் வகுப்பு மாணவர் மனோ, 6-ஆம் வகுப்பு மாணவர் சீமலேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவர்களை பார்த்தனர். பின்னர், மருத்துவரிடம் மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.  

இதற்கிடையே, சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின்னர், அந்தத் தொட்டியை சுத்தப்படுத்த அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT