தற்போதைய செய்திகள்

கணவர் கைவிட்டதால் பங்களாதேஷ் ரயில்நிலையத்தில் குழந்தை பெற்ற இந்தியப் பெண்!

ரோக்‌ஷனாவின் கணவர் அப்துல், பங்களாதேஷில் பிறந்தவர் என்றாலும் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த காலத்தில் ரோக்‌ஷனாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டிருந்தார்.

RKV

பங்களாதேஷ், டாக்கா ரயில்நிலையத்தில் இந்தியப் பெண்ணொருவர் ரயில்நிலைய கழிவறையில் குழந்தை பெற்றார். ரோக்‌ஷனா அக்தர் எனும் 30 வயது இந்தியப் பெண் அந்நாட்டின் தலைநகர் டாக்கா ரயில்நிலையக் கழிவறையில் குழந்தை பெற்றார். இளம்பெண், கழிவறையில் குழந்தை பெற்றதைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் விஷயத்தை கமலாபூர் ரயில் நிலையப் பொறுப்பாளரான யாசின் ஃபாரூக்கிடம் எடுத்துச் செல்ல திங்களன்று இரவு தாயும், சேயும் உடனடியாக அருகிலிருந்த முக்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம்பெயர்ந்தனர்.

ரோக்‌ஷனாவின் கணவர் அப்துல், பங்களாதேஷில் பிறந்தவர் என்றாலும் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த காலத்தில் ரோக்‌ஷனாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் மனைவியை பங்களாதேஷ் அழைத்துச் சென்ற அப்துல், அங்கு தனது சகோதரியின் இல்லத்தில் ரோக்‌ஷனாவைத் தங்க வைத்திருக்கிறார். ஆனால், என்ன காரணத்தாலோ சில நாட்களுக்கு முன்பு மனைவியின் பாஸ்போர்ட்டைத் திருடிக் கொண்டு காணாமல் போன அப்துல் அதன் பின் அவருடன் தொடர்பில் இல்லை எனத் தெரிகிறது. என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT