தற்போதைய செய்திகள்

மதுபானப் பிரியர்களுக்கு பீரை விடக் குளிர்ச்சியான ஒரு செய்தி!

டாஸ்மாக் மதுபானங்களை இனி MRP விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்கள்

DIN

டாஸ்மாக் மதுபானங்களை இனி MRP விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

அண்மை காலமாக டாஸ்மாக் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கடைகளில் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனமும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வினை காண முடியவில்லை. 650 மி.லி.  கிங்பிஷர் சுப்பீரியர் ஸ்ட்ராங் பியரின் நிர்ணயிக்கப்பட்ட விலை 120 தான் ஆனால் அது பத்து அல்லது இருபது ரூபாய் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு ப்ராண்டும் ரூ.5 முதல் 20 வரை விலையை அதிகரித்து விற்பனை நடைபெற்று வரும் நிலையே தொடர்ந்து வந்துள்ளது.

இதனை சரி செய்யவும் பீர் விற்பனையை மேம்படுத்தவும் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதுபானங்கள் இனி லேபிளிலில் குறிப்பிடப்பட்டுள்ள எம்ஆர்பி விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும், அதற்கு மேல் அதிகமான தொகை வசூலிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு மதுபானப் பிரியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT