தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்!

PTI

மும்பையில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயல்பட்டு வருபவர் ஹெர்மன் கோம்ஸ். ஹெர்மன் மற்றும் அவரது நண்பரை ஞாயிறு அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். 

இந்தத் தாக்குதல் பற்றி ஹெர்மன் கோம்ஸ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'வேலை முடித்து சனிக்கிழமை நள்ளிரவு டாக்ஸியில் கம்தேவி பகுதியிலுள்ள எனது வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தேன். கார்லிலிருந்து 1.30 மணிக்கு கீழே இறங்கி வீட்டுக்கு போன போது அங்கு என்னை அடையாளம் தெரியாத நான்கைந்து மர்ம நபர்கள்,  என் வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து தாக்கினார்கள். இதன் காரணமாக என் வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. என்னை மட்டுமின்றி என் நண்பரையும் சேர்த்து அந்த மர்ம நபர்கள் தாக்கினார்கள். மேலும், எங்களிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றனர் என்றார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெர்மன் கோம்ஸ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஹெர்மன் கோம்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT