பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக பா.ஜ.க.,வினர் மோதிரம் அணிவித்து பரிசுகளும் வழங்கினர்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், ‘நம் பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் சேவை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.