தற்போதைய செய்திகள்

உயிர்மை சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருதுகள் 2019!

உலக புத்தக தினத்தில் 2019 ஆம்  ஆண்டிற்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

உலக புத்தக தினத்தில் 2019 ஆம்  ஆண்டிற்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் ஆண்டுதோறும் ஆறு பிரிவுகளில் வழங்கி வரும் இந்த விருதுகளுக்கு இந்த ஆண்டு பத்துபேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் கொண்ட நடுவர் குழு இந்த விருதுக்குரியவர்களை தேர்வு செய்தது. பாராட்டுப்பத்திரமும் பரிசுப்பணமும் கொண்ட இந்த விருதுகள் வரும் மே 3ஆம் தேதி சுஜாதா பிறந்த தினத்தன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவிருக்கின்றன.

விருது பெற்றோர்:

சுஜாதா நாவல் விருது 2019

உயிர்நதி – சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை பதிப்பகம்)

சுஜாதா உரைநடை விருது 2019

கையிலிருக்கும் பூமி – சு.தியடோர் பாஸ்கரன் (உயிர்மை பதிப்பகம்)

சுஜாதா கவிதை விருது 2019 – (இருவருக்கு)

வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி – ராஜேஷ் வைரபாண்டியன் (உயிர்மை பதிப்பகம்)

நொதுமலர்க் கன்னி – மௌனன் யாத்ரிகா (டிஸ்கவரி புக் பேலஸ்)

சுஜாதா சிறுகதை விருது 2019 – (இருவருக்கு)

பாகேஸ்ரீ – எஸ்.சுரேஷ் (யாவரும் பப்ளிஷர்ஸ், பதாகை)

திருக்கார்த்தியல் – ராம் தங்கம் (வம்சி புக்ஸ்)

சுஜாதா இணைய விருது 2019 (இருவருக்கு)

http://www.philosophyprabhakaran.com/ – N.R.பிரபாகரன்

http://vasagasalai.com/ – வாசகசாலை

சுஜாதா சிற்றிதழ் விருது 2019 – (இருவருக்கு)

உயிர் எழுத்து – ஆசிரியர் : சுதீர் செந்தில்

நடுகல் – ஆசிரியர் : வா.மு.கோமு

நன்றி - உயிர்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தவெகவில் செங்கோட்டையன்! இபிஎஸ்ஸின் பதில் என்ன தெரியுமா?

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

SCROLL FOR NEXT