தற்போதைய செய்திகள்

ஜெனிவாவில் நடைபெற்ற 40-வது ஐ.நா கூட்டத் தொடரில் உரையாற்றிய கருணாஸ்!

DIN

சட்ட மன்றத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி ஜெனிவாவில் நடைபெற்ற 40-வது ஐ.நா  கூட்ட தொடரில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்கள்  உரையாற்றினார்.

இதில், 24.10.2014 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடந்த கூடாது என்று அம்சங்கள் கொண்டு தீர்மானத்தை வலியுறுத்தி பேசினார், இந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பதிவு செய்தார்.

பன்னாட்டு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்திற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க கூடாது. இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்று இந்த அமர்வில் கலந்து கொண்டு வலியுறுத்தினார். ஜெனிவா, ஐ.நா மன்றத்தில்  உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT