தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குரிய வழக்கில் தீர்ப்பு: ராஜஸ்தான், அயோத்தியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அயோத்தியில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அயோத்தி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அயோத்தியில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

தீா்ப்பு வெளியாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனவும் பல்வேறு ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT