தற்போதைய செய்திகள்

போரிஸுக்கு வந்ததன் மூலம் கரோனாவின் தீவிரம் உணர்த்தப்பட்டுள்ளது: தந்தை ஸ்டான்லி

DIN

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வந்ததன் மூலம் கரோனா நோய்த் தொற்று எந்த அளவுக்கு மோசமானது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமருக்குத் தகுந்த சிகிச்சையளித்ததற்காகத் தேசிய நல்வாழ்வுத் துறையினருக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் போரிஸின் தந்தை ஸ்டான்லி (வயது 79), அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்துவிட்டாலும் முழுவதும் குணமாகிவிட்டதாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

அவருக்கு நேரம் தேவைப்படும். மருத்துவமனையிலிருந்து அப்படியே நேரடியாக பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று பணியைத் தொடங்க முடியுமென எனக்குத் தோன்றவில்லை. சில கால அவகாசம் வேண்டியிருக்கும் என்றும் ஸ்டான்லி ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT