தற்போதைய செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா அறிகுறி

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மேலும் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

DIN

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மேலும் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் புளியங்குடியைச் சேர்ந்த 72 வயதான முதியவருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதி சுற்றியுள்ள நான்கு தெருக்களும் சீல் வைத்து மூடப்பட்டன. 

நகராட்சி நிர்வாகத்தினர் புளியங்குடி நகர்ப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்: நயினார் நாகேந்திரன்

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

ஈதலும் இசைபட வாழ்தலும்...

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

SCROLL FOR NEXT