தற்போதைய செய்திகள்

சிகிச்சைக்கு செல்ல அகதி சிறுமிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்

DIN

ராமநாதபுரம்:  ராமநாதபுரத்திலிருந்து சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்த 13 வயது இலங்கை அகதி சிறுமியை ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்படி மதுரைக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பு படித்துவரும்  ஒரு சிறுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

அப்போது அவருக்கு ரத்தப்புற்று பாதிப்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மாதந்தோறும் சிறுமிக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

தந்தையை இழந்த சிறுமி ஏப்ரல் மாதத்துக்கான சிகிச்சைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கால் வாகனங்கள் இல்லாத நிலையில், தனியாக வாகனத்தை வாடகைக்கு அமர்த்திச் செல்வதிலும் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் மக்கள் உதவித் திட்ட சிறப்பு கைபேசி எண்ணான 9489919722 என்ற எண்ணில் சிறுமி சார்பில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். சிறுமி நிலை அறிந்த காவல் கண்காணிப்பாளர் தினமும் ராமநாதபுரத்திலிருந்து தபால் கொண்டு செல்லும் காவல்துறை வாகனத்தில் சிறுமியையும், அவருடன் வருவோரையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் சிறுமி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

காவல்துறை வாகனத்தில் சிறுமியை தக்க நேரத்தில் மதுரைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT