தற்போதைய செய்திகள்

பிரிட்டனில் விரைவில் முகக் கவசம் கட்டாயமாகிறது

பிரிட்டனில் பொதுவெளியிலும் ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்போதும் மக்கள் முகக் கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தவிருக்கிறது.

DIN

பிரிட்டனில் பொதுவெளியிலும் ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்போதும் மக்கள் முகக் கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தவிருக்கிறது.

இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட - ஆனால், எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்களிடமிருந்து - மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இரு மீட்டர் தொலைவைப் பராமரிக்க முடியாதவர்கள் அவசியம் துணியால் செய்யப்பட்ட, வீட்டில் தைத்த முகக் கவசம் அல்லது தணித் துண்டுகள் அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை அணியலாம் என்றும் கூறப்படுகிறது.

உயர்நிலையில் ஆலோசித்த பிறகு, விரைவில் இதுதொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT