முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாக கரோனா தொற்று இல்லை

வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 22 பேருக்கு கரோனா நோய்த்  தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாகப் புதியதாக யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தற்போதைய செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாக கரோனா தொற்று இல்லை

வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 22 பேருக்கு கரோனா நோய்த்  தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாகப் புதியதாக யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
கோப்புப்படம்
பகிர்:

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 22 பேருக்கு கரோனா நோய்த்  தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாகப் புதியதாக யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா நோய் தொற்றுக்கு வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டதுடன், வேலூர் சைதாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதியுள்ள 13 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, வேலூரில் கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட கொணவட்டம், கருகம்பத்தூர், சைதாபேட்டை, ஆர்.என்.பாளையம், சின்னஅல்லாபுரம், கஸ்பா ஆகிய பகுதிகள் 100 சதவீதம் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளிலுள்ள அனைவருக்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக வேலூர் மாவட்டத்தில் புதியதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பாதிரியாருக்கு முதன்முதலில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம்19 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக கடந்த 17ஆம் தேதி 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றறால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதன்பிறகு கடந்த 10 நாள்களாக யாருக்கும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 3,126 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,536 பேருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. 568 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →