மாலி: மாலத்தீவில் கரோனா நோய்த் தொற்று காரணமாக முதன்முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலத்தீவில் இதுவரை 289 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் மாலியில் கரோனா பாதிப்பால் 83 வயதுப் பெண் ஒருவர் இறந்ததாக மாலத் தீவின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சுற்றுலா நாடான மாலத்தீவில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா, திடீரென அதிகரித்திருக்கிறது. எங்கிருந்து, யாரிடமிருந்து தொற்று பரவியது என இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.