ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 41 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். தீ விபத்தில் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனக் கூறினார்.
மேலும் மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக கூடுதல் தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.