முகப்பு
தற்போதைய செய்திகள்

எல்லோரும் பாராட்டும் வகையில் கூட்டணி முடிவு! - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றி...

Updated On : 5 மார்ச், 2026 at 12:28 PM
திருமண விழாவில் பேசிய முதல்வர்...
பகிர்:

தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.

விழாவில் பேசிய அவர், "நேற்று இரவு வரை, கூட்டணி கட்சிகளுடன் பேசி ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான், எல்லோரும் பாராட்டும் வகையில் முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் எல்லோரும் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம், ஒப்பந்ததை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, கை காட்டிவிட்டு காரில் ஏறினேன். அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை, காரில் ஏறியபோது அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து 'முடிந்துவிட்டது' என்று கூறினேன். அதை இன்றைக்கு பெரிய வைரல் ஆகிவிட்டார்கள்.

ஆகவே, அந்த மகிழ்ச்சியுடன்தான் வந்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், இந்த திருமணத்தை முடித்துவிட்டு மாநிலங்களவை வேட்பாளர்களாக இரண்டு பேரை நாம் அறிவித்திருக்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்கள் கொடுத்திருக்கிறோம், அந்த 4 பேரும் சரியாக பகல் 12 மணி அளவில் சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள், நான் வந்தே ஆக வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார்கள். ஆகவே, இதை முடித்துவிட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழல் இருக்கிற காரணத்தால்தான் வேகவேகமாக வந்து திருமணத்தை முடித்து வைத்துவிட்டு செல்லவிருக்கிறேன்" எனப் பேசினார்

Advertisement

நேற்று இரவு வரை திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், காங்கிரஸுக்கு 28 பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதுவரை காங்கிரஸ், மமக, மதிமுக, ஐயுஎம்எல், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

DMK - congress alliance decision is appreciated by everyone: MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.