ஒடிசாவில் புதிதாக 1,699 பேருக்கு கரோனா தொற்று: 10-க்கும் அதிகமானோர் பலி
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,699 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 235-ஆக அதிகரித்துள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,699 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 235-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒடிசாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒடிசாவில் மொத்த கரோனா பாதிப்பு 40,717-ஆக உள்ளது. புதிதாக 1,699 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 10-க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்தனர்.
இதில் கன்சம் மாவட்டத்தில் 3 பேரும், சுந்தர்கர் மாவட்டத்தில் 2 பேரும், பத்ராக், காந்தமால், குஞ்சர், நபரங்பூர் மற்றும் நாயகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இதேபோன்று இன்றைய (வியாழக்கிழமை) கரோனா பாதிப்புகளில், கன்சம் மாவட்டத்தில் அதிக அளவாக 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குர்தா (220), சுந்தர்கர் (178), கட்டாக் (105), சம்பல்பூர் (101) ஆக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த பாதிப்புகளில் இதுவரை 25,738 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மட்டும் 15,086 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 6,00,591 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.