பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்
செய்திகள் - படங்களில்
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரில் பெரும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கடை வீதி.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரில் பெரும் மழையைத் தொடர்ந்து பெருகியோடிய வெள்ளத்தில் மூழ்கியுள்ள கோவில்.
'நீட்' எதிர்ப்பு: நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்த திரிணாமுல் காங்கிரஸார்.
அவர் இருக்கிறார்: வட கொரியாவில் பெருமழை பெய்த தெற்கு வாங்கே பகுதிக்குச் சென்று பார்க்கிறார் நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன். அதிபர் கிம் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தை, ஆக. 28 வெள்ளிக்கிழமை, வட கொரிய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.