முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரிட்டனிலிருந்து கொல்கத்தா வந்த 2 பேருக்கு கரோனா

பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வந்த 2 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வந்த 2 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு 222 பயணிகளுடன் வந்த விமானத்தில் பயணித்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் மரபனுவைக் கண்டறிய புணேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லிக்கு 266 பயணிகளுடன் வந்த விமானத்தில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

முன்னதாக, இந்தியா - பிரிட்டன் இடையே இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →