கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதில், அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி கண்ணன்(57), மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
இதனால் திம்மலை கிராமத்தில் சுகாதார குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.