தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க நிறுவனர், திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்ட

DIN


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க நிறுவனர், திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்ட 18 பேர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

தூத்துக்குடியைடுத்த குமரெட்டியபுரம் கிராமத்தில்  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 100 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தொடர்ந்து 2018 மார்ச் 3 இல்,  மே17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு ஆகியோர் கிராம மக்களை சந்திக்க சென்றார்களாம். 

இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய காவலர்கள் எவ்வித முன் அனுமதி இன்றி தடையை மீறி சென்றதாக 2018 மார்ச் 4 ஆம் தேதி  திருமுருகன் காந்தி,பாத்திமா பாபு உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை 2019 ஜுலை 16 இல் சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 இல்  நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக திருமுருகன் காந்தி, பாத்திமா பாபு உள்பட 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT