பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 28, 2020
செய்திகள் - படங்களில்
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற வயதான பெண்மணியுடன் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, டாக்டர் அம்பேத்கரின் பேரன் ராஜ் ரத்தன் அம்பேத்கர்.
வடகிழக்கு தில்லியில் கஜூரி காஸில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள, வகுப்புக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.
வடகிழக்கு தில்லியில் வகுப்புக் கலவரத்தில் கஜூரி காஸில் தன்னுடைய கடையில் எரிக்கப்பட்டுவிட்ட கணக்குப் பதிவுப் புத்தகத்தைக் காட்டுகிறார் கடைக்காரர்.
முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்ட ஒரு கடை.
ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.
புத்த கயாவிலுள்ள மகாபோதி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபடும் மியான்மர் அதிபர் உ வின் மின்ட்.
வாராணசியிலுள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்ட மொரிஷீயஸ் அதிபர் பிருத்விராஜ்சிங் ரூபன்.
பெங்களூருவில் நடைபெற்ற பி.எஸ். எடியூரப்பாவின் 78-வது பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறார் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா. அருகே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
தென் கொரியாவில் சியோல் நகரில் வெள்ளிக்கிழமை கரோனா அச்சம் காரணமாக முகக் கவசங்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்.