தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1.60 லட்சமாக அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்தைக் கடந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 4,538 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்தைக் கடந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 4,538 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 73 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாவா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 18.31 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1,60,907 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை, அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 263 பேருக்கும், திருவள்ளூரில் 220 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1.10 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 3,391 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,10,807 ஆகும்.

மேலும் 79 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் மேலும் 79 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,315-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று அரையிறுதியில் பலப்பரீட்சை

ரூ. 9.50 லட்சத்தில் சாலை பணிக்கு பூமி பூஜை

சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு

மாற்றம் காணாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி

கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடத் தயங்குவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT