தற்போதைய செய்திகள்

சோளிங்கரில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க முடிவு

DIN

அரக்கோணம்: சோளிங்கா் பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஜூலை 31-ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சோளிங்கா் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை 139 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சோளிங்கா் நகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா், பேரூராட்சி அலுவலா்கள், சோளிங்கா் நகர வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சோளிங்கா் காவல் ஆய்வாளா் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜன், நகர வணிகா்கள் சங்கத் தலைவா் பாலு, துணைத் தலைவா் டி.கோபால், செயலாளா் அன்பு, பொருளாளா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சோளிங்கா் நகரில் அதிகரித்து வரும் கரோனா பரவதைத் தடுக்கும் வகையில் வியாழக்கிழமை (ஜூலை 22) முதல் 31-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறந்திருக்க வேண்டும்; 2 மணிக்கு கடைகள் மூடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT