சேலம் அருகே இரு கார்கள் மோதி கணவன், மனைவி உள்பட மூவர் பலி
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கீரிப்பட்டி கொரணக்காடு பகுதியில் புதன்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கீரிப்பட்டி கொரணக்காடு பகுதியில் புதன்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கீரிப்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட பின், தம்மம்பட்டியில் நகை வாங்க காரில் சிவக்குமார் (48), அவரது மனைவி வரலட்சுமி (40), உறவினர் சாந்தி (38) ஆகியோர் காரில் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.
வழியில் இவர்கள் காரும் எதிரே வந்த காரும் மோதிக் கொண்டதில் அந்த இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.
மல்லியகரை காவல் ஆய்வாளர் பொறுப்பு கே. முருகேசன் வழக்குப்பதிவு செய்து மூவரின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.