தனிவாரியம்: சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்: ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் தென்னிந்திய அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், வாகன ஓட்டுநர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஒரகடம் பகுதியில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ஒரகடம் பகுதி தலைவர் அன்பு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் செல்வம், ஒரகடம் பகுதி செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துனைத்தலைவர் அன்பு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் திவாகர், ஜெகன், ராமு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.