தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடையில் தூர்வாரும் பணி: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதியான சீர்காழி வட்டத்தில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்தார்.

DIN

சீர்காழி:  பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதியான சீர்காழி வட்டத்தில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்தார்.

சீர்காழி வட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில், வைரவனிருப்பு கிராமம் புதுமண்ணியாறு, கூத்தியம்பேட்டை கிராமம் கோண வாய்க்கால், ஓதவந்தான்குடி கிராமம் ஓதவந்தான்குடி வாய்க்கால், பன்னன்குடி கிராமம், பன்னன்குடி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சீர்காழி வட்டம் புத்தூரில் புதுமண்ணியாற்றில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணியை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன். பி. நாயர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நாகை மாவட்டத்தில் இதுவரை 1073 கி.மீ. தூரம் வரை தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 204 இயந்திரங்கள் மூலம் 740  கி.மீ. வரை பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மீதம் 334 கி.மீ. தூரம் உள்ளது. இந்நிலையில் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தற்போது பணிகள் விரைவாக துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அப்போது உதவி ஆட்சியர் கலெக்டர் பிரசாந்த், மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, செயற்பொறியாளர் சண்முகம், உதவிப்பொறியாளர் சரவணன் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT