petrol, diesel sale in chennai 
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

DIN

பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. 

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. 

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து 21 நாள்களாக அதிகரித்த வந்த பெட்ரோல், டீசல் விலையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இன்று மீண்டும் இரு எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

SCROLL FOR NEXT