முகப்பு
தற்போதைய செய்திகள்

மேக் இன் இந்தியா - பா.ஜ.க. சொன்னதும் செய்ததும்: ராகுல் சாடல்

இந்தியாவிலேயே தயாரிப்போம் என்று சொல்லிக்கொண்டே பிரதமர் மோடியின் அரசு, சீனாவிலிருந்து ஏராளமாக இறக்குமதி செய்துகொண்டிருப்பதாகக் கேலியாகச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
ராகுல் சுட்டியுள்ள வரைபடம்
பகிர்:

இந்தியாவிலேயே தயாரிப்போம் என்று சொல்லிக்கொண்டே பிரதமர் மோடியின் அரசு, சீனாவிலிருந்து ஏராளமாக இறக்குமதி செய்துகொண்டிருப்பதாகக் கேலியாகச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

இதுபற்றி சுட்டுரைக் குறிப்பொன்றை செவ்வாய்க் கிழமை வெளியிட்டுள்ளார் அவர்.

தரவுகள் பொய் சொல்வதில்லை  என்று தலைப்பிட்டுள்ள இந்த சுட்டுரையில் , காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடி படங்களுடன் இருவருடைய காலங்களிலும் சீனாவிலிருந்து செய்யப்பட்ட  இறக்குமதி பற்றிய வரைபடத்தையும் இணைத்துள்ளார்.

கூடவே, "பாரதிய ஜனதா கட்சி சொன்னது: இந்தியாவிலேயே தயாரிப்போம், பாரதிய ஜனதா கட்சி செய்தது: சீனாவிலிருந்து வாங்கியது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அளவைக் காட்டுகிறது வரைபடம்!

முழு கட்டுரையைப் படிக்க →