தற்போதைய செய்திகள்

சென்னையில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அறிவிப்பு

DIN

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்த விதித்து பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் இம் மாதம் 29-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் பொது இடங்களில் நடத்தப்படும் அனைத்து விதமான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவர்கள், 5 நாள்களுக்கு முன்னதாகவே காவல்துறைக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அனுமதித்தால் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு தமிழ்நாடு நகர காவல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சென்னை பெருநகர காவல்துறையில் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT