மமதாவின் குழந்தையுடன் ரயிலிலிருந்து இறங்குகிறார் மருத்துவப் பணியாளர் 
தற்போதைய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பிறந்த 21 குழந்தைகள்!

கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

DIN

கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

குஜராத்தில் ஜாம்நகரில் நிறைமாத கர்ப்பிணியாக ரயிலேறிய மமதா, பிகாரில் சப்ரா ரயில் நிலையத்தில் இறங்கும்போது கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன் இறங்கினார்.

ரயில் பெட்டியே மகப்பேறு அறையாக மாற்றப்பட்டுக் குழந்தையும் பெற்றெடுத்தார் மமதா. இந்த தாய் மற்றும் குழந்தைக்கான மருத்துவ கவனிப்புக்காக,  இடைநில்லா இந்த சிறப்பு ரயில், ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பின்னர், அதே ரயிலிலேயே மமதா அவருடைய ஊரைச் சென்றடைந்தார்.

மே முதல் நாளிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களில் சுமார் 21 குழந்தைகள் பிறந்திருப்பதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

கெடுவினையாக வெவ்வேறு ரயில்களில் இரு குழந்தைகள் மட்டும் இறந்தே பிறந்தன, மற்றொரு பெண் குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT