தற்போதைய செய்திகள்

என்.சி.பி.எச். நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனை

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (என்.சி.பி.எச்.) தொடங்கப்பட்ட 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒருவார கால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

DIN

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (என்.சி.பி.எச்.) தொடங்கப்பட்ட 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒருவார கால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி நிறுவனம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஜூன் 1 முதல் 7  ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு என்.சி.பி.எச். வெளியீடுகளான நூல்களுக்கு விலையில் 25 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அரசியல், அறிவியல், மொழி, கலை, இலக்கியம், தத்துவம், சிறுவர் நூல்கள், தன் முன்னேற்ற நூல்கள், மார்க்சியம் மற்றும் மெய்யியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் மற்றும் சோவியத் இலக்கியங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு வருகிறது என்சிபிஎச்.

தமிழகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து என்சிபிஎச் கிளைகளிலும் விற்பனையில் சிறப்புத் தள்ளுபடி  வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT