மணத்தட்டை-மருங்காபுரி காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
மணத்தட்டை-மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகின்றது, இதனால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மணப்பாறையில்: மணத்தட்டை-மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகின்றது, இதனால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த மணத்தட்டை பகுதி காவிரி ஆற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரி குடிநீர் மணப்பாறை–குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று மாலை கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2 மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் துருபிடித்து பழுதாகி இருந்த காரணத்தால் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வந்த குடிநீர் சுமார் 10 அடி தூரத்திற்கு நாலாபக்கமும் பீறிட்டு அடித்தது.
தகவலறிந்து குடிநீர் மற்றும் வடிகால் அதிகாரிகள், குடிநீர் ஏற்றத்தை நிறுத்திய நிலையிலும், குழாயில் சென்ற குடிநீர் சுமார் 2 மணி நேரம் பீறிட்டு அடித்து அருகில் இருந்த கால்வாய்களில் காற்றாற்று போல பாய்ந்தது.
இந்த நிகழ்வில் மணப்பாறை பகுதிக்கு செல்லும் 12 லட்சம் லிட்டர் தண்ணீரில் சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி ஆற்றில் ஓடியது. கடந்த 2002-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 2004-ஆம் ஆண்டு மூதல் பயன்பாட்டில் உள்ள இந்த இரும்பு குழாய் அநேக இடங்களில் துருபிடித்து பழுதாகி வருகிறது. கோடைகாலத்தில் ஏற்கனவே தண்ணீருக்கான தட்டுபாடு உள்ள நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாக்குவதை இதை குடிநீர் மற்றும் வடிகால் அதிகாரிகள் கவணத்தில்கொண்டு ஆபத்து வருமுன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மணப்பாறை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.