அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு மேலும் தாமதமாகும்?
264 இடங்களைப் பெற்றிருக்கும் ஜோ பிடன், முழு வெற்றி பெற்று வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவாரா என்றறிய மேலும் சில நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
தற்போதைய செய்திகள்அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு மேலும் தாமதமாகும்?
264 இடங்களைப் பெற்றிருக்கும் ஜோ பிடன், முழு வெற்றி பெற்று வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவாரா என்றறிய மேலும் சில நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து இரு நாள்களான பின்னரும் இன்னமும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை.
இதனால் தேர்தல் முடிவு தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
வெள்ளை மாளிகையைப் பொருத்தவரை இந்த நாளும் எவ்வித நிச்சயமற்ற நிலைமையில்தான் விடிந்தது.
இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் தேர்தல் அவையில் அதிபர் பொறுப்பேற்கத் தேவையான 270 இடங்களை யாரும் பெறவில்லை.
264 இடங்களைப் பெற்றிருக்கும் ஜோ பிடன், முழு வெற்றி பெற்று வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவாரா என்றறிய மேலும் சில நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
வடக்கு கரோலினாவிலும் இன்னும் லட்சக்கணக்கில் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில் முடிவுகள் வெளிவருவது தாமதமாகும் என்றே கருதப்படுகிறது.
ஏற்கெனவே இந்த மாகாணத்தில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக புதன்கிழமையே முந்திக்கொண்டு அறிவித்தார் அதிபர் டிரம்ப்.
வடக்கு கரோலினாவில் பெரும்பான்மையான மின்னஞ்சல் வாக்குகளை ஜோ பிடனே பெற்றுவரும் நிலையில், மீதியிருக்கும் வாக்குகளிலும் அவரே பெரும்பான்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெவாடா மாகாணத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, அதிபர் டிரம்ப்பைவிட மிகக் குறைந்த அளவிலேயே ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார்.
இன்னமும் ஏராளமான வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அத்தனை விரைவில் அறிவித்துவிட முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.
இந்தத் தேர்தலின் முடிவை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது என்றும் சட்டப்படியான அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டதும் முடிவு அறிவிக்கப்படும் என்றும் நெவாடாவின் அட்டர்னி ஜெனரல் ஆரோன் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெவாடாவில் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் வாக்கு எண்ணிக்கை முடியாது என்று கிளார்க் கவுன்ட்டி பதிவாளர் ஜோ கிளாரியா அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் பெருமளவிலான மின்னஞ்சல் எங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கிறோம். அவற்றையும் எண்ணி முடித்த பின்னரே முடிவுகள் தெரிய வரும் என்றும் கிளாரியா குறிப்பிட்டுள்ளார்.