அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், 78 வயது நிறைவுற்று, 79 ஆம் வயதில் அடியெடுத்துவைத்துள்ளார்.
1942 நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ஜோ பைடன். இன்னும் இரு மாதங்களில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பைடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் மிகவும் மூத்த அதிபர்.
இந்த நூற்றாண்டிலேயே மிகவும் மோசமான நலவாழ்வுச் சூழல், மிக மோசமான வேலைவாய்ப்பின்மை, மீண்டும் எழும் இன ரீதியிலான அநீதி போன்ற சிக்கலான நிலையில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார் 78 வயது பைடன்.
வயது என்பது வெறும் எண் மட்டும்தான், அரசுப் பணியாற்றுவதற்கும் வயதுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதையும் ஜோ பைடன் நிகழ்த்திக் காட்டுவார்.
இதற்கு முன்னர், மிகவும் வயதான அதிபர் ரொனால்ட் ரேகன். அவர் பதவிக் காலம் முடிந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் வயது - 77 ஆண்டுகள், 349 நாள்கள்.
ஜோ பைடன், அவருடைய பிறந்த நாளான வெள்ளிக்கிழமை, வழக்கமான பணிகளை மேற்கொண்டு, அடுத்து அரசுப் பொறுப்பேற்பது பற்றி ஜனநாயகக் கட்சியின் உயர் தலைவர்களான நான்சி பெலோசி, சக் ஸ்கமர் ஆகியோருடன் விவாதித்தார்.
தனியே நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, பூங்கொத்து அளித்து பைடனை பெலோசி வாழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வயது 74. பைடனைவிட சுமார் 4 வயது குறைந்தவர்.
துணை அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ், பைடனைவிட ஏறத்தாழ 20 வயது இளையவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.