தற்போதைய செய்திகள்

நிவர் புயல்- விழுப்புரம் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்

DIN



நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயலையொட்டி அதிக கனமழை, பலத்த காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில்  போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல், மழை காரணமாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 44 புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT