சொத்து பிரச்னையில் தலையிட்ட தாய் மாமன் அடித்துக் கொலை: காவல் நிலையத்தில் இளைஞர் சரண்
கள்ளக்குறிச்சியில் சொத்து பிரச்னையில் தலையிட்ட தாய் மாமனை அடித்துக் கொன்ற இளைஞர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரண்அடைந்தார்.
கள்ளக்குறிச்சியில் சொத்து பிரச்னையில் தலையிட்ட தாய் மாமனை அடித்துக் கொன்ற இளைஞர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரண்அடைந்தார்.
கள்ளக்குறிச்சி மோரைப்பாதை பகுதியில் வசித்து வரும் சர்வேஷ்( 34) என்ற இளைஞர், தங்களது அரிசி ஆலை இடம் தொடர்பான பிரச்னையில், அதே பகுதியைச் சேர்ந்த அவரது தாய் மாமன் திருநாவுக்கரசு( 54), தலையிட்டதால் ஆத்திரமடைந்த சர்வேஷ், வியாழக்கிழமை தனது தாய்மாமனை அடித்துக்கொலை செய்தார்.
கொலை செய்த சர்வேஷ், உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரண்அடைந்தார்.