'தில்லியில் கரோனா: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (68%) மாநாடு தொடர்புள்ளவர்கள்'
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள்...
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தில்லி மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்த ஜெயின், தொற்று பாதித்துள்ள 1,578 பேரில் 1,080 பேர் (68.4 சதவிகிதம்) மாநாடு தொடர்புடையவர்கள் என்றார்.
பாதிக்கப்பட்ட 1,578 பேரில் 867 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 32 நோயாளிகள் செயற்கை சுவாச சாதன உதவியுடனும் இருக்கின்றனர். இறந்தவர்கள் 32 பேர் .
Advertisement
மேலும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.