வாக்காளர்கள் வாக்குப்பதிவின் போது கரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று 2-ஆம் கட்டமாக அதிகரித்து வரும் நிலையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதனால் கரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளா்களுக்கு கையுறைகள், சானிடைசா் வழங்கப்படுவதுடன் தொ்மல்ஸ்கேனா் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்கும்போது கையொப்பமிடுவதற்காக தங்களுக்கென தனியே பேனாவை எடுத்து செல்வது பாதுகாப்பானதாக அமையும். தேர்தல் ஆணையத்தால் கையுறைகள் வழங்கப்படும் சூழலிலும் வாக்காளர்கள் அதீகவனமாக தங்களது வாக்குகளை செலுத்துவது தொற்று பாதிப்பைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.
அதேபோல் வாக்காளர்கள் வசதிக்காக வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்த 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்காளா்கள் வாக்களிக்க தோ்தல் ஆணையத்தின் மூலம், வாக்காளா்அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வருமானவரி அட்டை, குடும்ப அட்டை, கடவுச் சீட்டு, வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது), மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது) அரசு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, பணி அடையாள அட்டை (மத்திய, மாநில அரசு, பொது நிறுவனங்கள் வழங்கியது), ஓட்டுநா் உரிமம், அலுவலக அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்கள்அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.