முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 81.70% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:


புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக ஏனாமில் 91.26 சதவிகிதமும், குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72.66 சதவிகிதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை விட 2.34 சதவிகித வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன. 

புதுவை மாநிலத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5 மற்றும் ஏனாம், மாஹே என மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 635 இடங்களில் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.