முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி

சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டிஎன்சிஎஸ்சி மற்றும் ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 2:43 PM
சீர்காழியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

சீர்காழி: சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டிஎன்சிஎஸ்சி மற்றும் ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நல்லூர் நேரடி கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர் மறைந்த காசிநாதன் குடும்பத்திற்கு ரூ.10,000 குடும்பநல நிதி நிதியாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சீர்காழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை வகித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காசோலையை வழங்கினார்.

இதில்,  மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாவட்ட செயலாளர் ராமன், ஏஐடியுசி நிர்வாகிகள் சிவகுருநாதன், சம்பத், கலைச்செல்வன், ரமேஷ், ராஜா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.