ஆரணி பேரூராட்சியில் கருணாநிதி 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு 
தற்போதைய செய்திகள்

ஆரணி பேரூராட்சியில் கருணாநிதி 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

DIN


ஆரணி: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி, ஆரணி பேரூராட்சி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் ஜிபி வெங்கடேசன் தலைமையில் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திமுகவினர் கருணாநிதியின் முழு உருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில், முன்னாள் நகரச் செயலாளர் கண்ணதாசன் வழக்குரைஞர் அன்பு அண்ணன், முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஆரணி பேரூராட்சி அமைந்துள்ள 15 வார்டுகளிலும் கருணாநிதியின் முழு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் ராமர் கோயில் அருகே அமைந்துள்ள கும்மடம் பகுதியில் வழக்குரைஞர் ரமேஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT