நாமக்கல் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  ராஜேஷ்குமார். 
தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதனைத்தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் நாமக்கல்- சேலம் சாலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திசெல்வன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT