திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட எம். பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்கள். 
தற்போதைய செய்திகள்

திருப்புவனம் அருகே மகளிர் குழுவுக்கு கட்டடம் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மகளிர் குழுவிற்கு கட்டிடம் கேட்டு ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மகளிர் குழுவிற்கு கட்டிடம் கேட்டு ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் எம்.பழையன்குளம் கிராமத்தில் மகளிர் குழுவுக்கு என தனியாக கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது இந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டடத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

இதையடுத்துத்து முக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வசந்தா தலைமையில் ஏராளமான பெண்கள் திருப்புவனத்துக்கு திரண்டு வந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எம்.பறையன்குளம் கிராமத்தில் மகளிர் குழுவுக்கு என கட்டப்பட்ட கட்டடத்தை மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கை குறித்த மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் அவர்கள் கொடுத்தனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT