முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி 4 வழிச் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளான வேன்.
பகிர்:

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). இவர், ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் எனும் ஊரில் உள்ள தனது குலசாமியைக் கும்பிடுவதற்காக தானும், தனது குடும்பத்தார் உள்பட மொத்தம் 6 பேருடன் ஒரு வேனில் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பினராம். வேனை  திருவள்ளூரைச் சேர்ந்த செல்லா என்பவர் ஓட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், அவர்கள் வந்த வேனானது அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராம 4 வழிச்சாலை சந்திப்பில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப்பள்ளத்தில் குப்புறக்கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சதீஷ்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் 6 பேரும் காயமடைந்தனர். ஓட்டுநர் செல்லாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 அவசர மீட்பு வாகனம் மூலம் 6 பேரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர்கள்,சுய விருப்பப்பத்தின்படி, அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர்,வேன் ஓட்டுநர் செல்லாவிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.