முகப்பு
தற்போதைய செய்திகள்

நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்: ஓட்டுநர் பலி

அவிநாசி அருகே நின்றிருந்த லாரியின் பின்னால் கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்
பகிர்:


அவிநாசி: அவிநாசி அருகே நின்றிருந்த லாரியின் பின்னால் கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு, லாரி வியாழக்கிழமை கோவை உக்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவிநாசி, நாதம்பாளையம் பிரிவு அருகே சேலம்-கோவை 6 வழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது லாரி பழுதடைந்ததை அடுத்து லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இதைத்தொடர்ந்து, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த முந்திரி லோடு ஏற்றி வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. 

Advertisement


நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி உருக்குலைந்த கண்டெய்னர் லாரி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த பன்ராஜ் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments