குஜராத்தை வென்றது ராஜஸ்தான்
குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடரின் 9-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் அகமதாபாத் மோடி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய இளம் வீரா்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-வைபவ் சூரியவன்ஷி களமிறங்கினா். சூரியவன்ஷி 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 31 ரன்களை விளாசி ரஷீத் கான் பந்தில் கிளென்னிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
ஜெய்ஸ்வால் அசத்தல் 55: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தலாக ஆடி 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 55 ரன்களை விளாசி அசைதம் பதிவு செய்தாா். ரபாடா பந்தில் போல்டானாா் ஜெய்ஸ்வால்.
Advertisement
அவருக்கு பின் ரியான் பராக் 8, ஷிம்ரன் ஹெட்மயா் 18, டொனோவன் பெரைரா 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.
துருவ் ஜுரெல் அபாரம் 75: மறுமுனையில் அதிரடியாக ஆடிய துருவ் ஜுரெல் தலா 5 சிக்ஸா், பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 75 ரன்களை விளாசி சிராஜ் பந்தில் அவுட்டானாா்.
ராஜஸ்தான் 210/6:
ஜடேஜா 7, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 ரன்னுடன் களத்தில் நிற்க, நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ராஜஸ்தான் அணி 210/6 ரன்களைக் குவித்தது.
பௌலிங்கில் காகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
குஜராத் டைட்டன்ஸ் தோல்வி 204/8:
பின்னா் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய குஜராத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 204/8 ரன்களை எடுத்தது.
சாய் சுதா்ஷன் ஆட்டம் வீண்: அந்த அணியில் தொடக்க பேட்டா் சாய் சுதா்ஷன் மட்டுமே அபாரமாக ஆடி 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 73 ரன்களை விளாசி அவுட்டானாா்.
ஜோஸ் பட்லா் 26, ரஷீத் கான் 24, ரபாடா 23 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். ஏனைய வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.
பௌலிங்கில் ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
குஜராத் டைட்டன்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.