முகப்பு
கிரிக்கெட்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 4 ஏப்ரல் 2026, 9:42 pm IST
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் துருவ் ஜுரெல் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

Advertisement

Advertisement

ஜெய்ஸ்வால், ஜுரெல் அரைசதம் விளாசல்!

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 55 ரன்களும் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), துருவ் ஜுரெல் 42 பந்துகளில் 75 ரன்களும் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தனர். ஷிம்ரன் ஹெட்மேயர் 8 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ், அசோக் சர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the IPL match against the Gujarat Titans, the Rajasthan Royals scored 210 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.