ரியான் பராக், துருவ் ஜுரெல் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 194 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்தது.
ரியான் பராக், துருவ் ஜுரெல் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 194 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜுரெல் மற்றும் கேப்டன் ரியான் பராக் அரைசதம் விளாசி அசத்தினர். துருவ் ஜுரெல் 40 பந்துகளில் 53 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரியான் பராக் 26 பந்துகளில் 51 ரன்களும் (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லுங்கி இங்கிடி மற்றும் மாதவ் திவாரி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.
In the IPL match against the Delhi Capitals, the Rajasthan Royals, batting first, scored 193 runs for the loss of 8 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.