மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை பகல் 12 மணிக்கு வினாடிக்கு 15,400 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்து வருகிறது.
அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 15,400 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.
மழையளவு 69.00 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.